/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
முட்டுக்காடு, செங்கண்மால் கோவில் காலியிடம் ஒப்பந்தத்தில் தனியாருக்கு அளிக்க அறிவிப்பு
/
முட்டுக்காடு, செங்கண்மால் கோவில் காலியிடம் ஒப்பந்தத்தில் தனியாருக்கு அளிக்க அறிவிப்பு
முட்டுக்காடு, செங்கண்மால் கோவில் காலியிடம் ஒப்பந்தத்தில் தனியாருக்கு அளிக்க அறிவிப்பு
முட்டுக்காடு, செங்கண்மால் கோவில் காலியிடம் ஒப்பந்தத்தில் தனியாருக்கு அளிக்க அறிவிப்பு
ADDED : பிப் 18, 2025 11:56 PM
-
ஹிந்து சமய அறநிலையத்துறை கோவில்களின் காலி இடங்களை, ஒப்பந்தத்தில் தனியார் பயன்பாட்டிற்கு அளிப்பதாக, கோவில் நிர்வாகங்கள் அறிவித்து உள்ளன.
செங்கல்பட்டு மாவட்டத்தில், ஹிந்து சமய அறநிலையத்துறை நிர்வகிக்கும் கோவில்கள் உள்ளன.
கோவில்களுக்கு சொந்தமாக, பிரதான பகுதிகளில் உள்ள இடங்களை மாத வாடகை, குத்தகை ஆகிய அடிப்படையில், தனியார் பயன்படுத்துகின்றனர்.
இது ஒருபுறமிருக்க, பல கோவில்களின் பல ஏக்கர் காலியிடங்கள், எத்தகைய பயன்பாடும் இல்லாமல் வீணாக கிடக்கின்றன. இதனால், கோவிலுக்கு வருவாய் கருதி, காலியிடங்களை வணிக பயன்பாட்டிற்காக, ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் அளிக்க, கோவில் நிர்வாகங்கள் முடிவெடுத்து உள்ளன.
சென்னை அடுத்த முட்டுக்காடில், வேம்படி விநாயகர் கோவிலுக்குச் சொந்தமாக, புல எண் 108/9ல் 1.68 ஏக்கர், புல எண் 108/10ல் 1.41 ஏக்கர் என, மொத்தம் 3.09 ஏக்கர் காலியிடம் உள்ளது.
இந்நிலத்தை காலியிடமாக மட்டும் பயன்படுத்த, ஐந்து ஆண்டுகள் குத்தகைக்கு, ஒப்பந்தத்தில் தனியாரிடம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், திருப்போரூர் அடுத்த செங்கண்மால் பகுதியில், செங்கண்மாலீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமாக, புல எண் '1378/2ஏ'ல் 2.30 ஏக்கர் மற்றும் 2.94 ஏக்கர் நிலங்கள் உள்ளன.
இந்த நிலங்கள், வணிக பயன்பாட்டிற்கு, தனித்தனியே மாத வாடகை அடிப்படையில், ஐந்து ஆண்டுகள் ஒப்பந்தத்தில் அளிக்கப்பட உள்ளன.
இந்த நிலங்களுக்கான ஏலம், நிலம் உள்ள பகுதியில், வரும் மார்ச் 4ம் தேதி உதவி ஆணையர், சரக ஆய்வாளர் முன்னிலையில் நடத்தப்பட உள்ளதாகவும், ஏலத்தில் பங்கேற்போர், 5 லட்சம் ரூபாய் முன்வைப்புத் தொகை செலுத்த வேண்டும் என்றும், கோவில் நிர்வாகங்கள் தற்போது அறிவித்து உள்ளன.
நமது நிருபர் -