ADDED : அக் 25, 2024 07:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்தவர் சேகர், 67. மது பழக்கம் காரணமாக, கடந்த 15 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த 13ம் தேதி மாலை, கடைக்குச் செல்வதாக வீட்டில் கூறி சென்றவர், அதன்பின் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து, அவரது மகன் சந்தானம், திருக்கழுக்குன்றம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு, ருத்திரான்கோவில் பகுதி புதரில், அழுகிய முதியவர் பிணம் கிடப்பதாக, போலீசாருக்கு தெரிந்தது.
போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்தபோது, இறந்தவர் சேகர் என்பதை குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர். இதுகுறித்து, மேலும் விசாரிக்கின்றனர்.