/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நந்திவரம் - கூடுவாஞ்சேரிக்கு குடிநீர் சீராக வினியோகம் செய்யாததால் பாதிப்பு
/
நந்திவரம் - கூடுவாஞ்சேரிக்கு குடிநீர் சீராக வினியோகம் செய்யாததால் பாதிப்பு
நந்திவரம் - கூடுவாஞ்சேரிக்கு குடிநீர் சீராக வினியோகம் செய்யாததால் பாதிப்பு
நந்திவரம் - கூடுவாஞ்சேரிக்கு குடிநீர் சீராக வினியோகம் செய்யாததால் பாதிப்பு
ADDED : மே 27, 2025 12:09 AM
செங்கல்பட்டு, நந்திவரம் -- கூடுவாஞ்சேரி நகராட்சி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் குடிநீர் சீராக வழங்காததால், 20,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
நந்திவரம் -- கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் வாயிலாக, மாமண்டூர் பாலாற்றில் மூன்று கிணறுகள் அமைத்து, குழாய் வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 2023ம் ஆண்டு பெய்த மழையில், பாலாற்றில் தண்ணீர் அதிகமாக சென்ற போது, குடிநீர் குழாய்கள் மற்றும் மின்வடங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால், நகராட்சிக்கு குடிநீர் வினியோகம் தடைபட்டது.
இதைத்தொடர்ந்து, புதிதாக குழாய்கள் மற்றும் கூடுதல் குடிநீர் வழங்க வேண்டும் என, மாவட்ட கலெக்டர் மற்றும் அமைச்சர்கள், முதல்வர் ஆகியோரிடம், அரசியல் கட்சி பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.
இதைத்தொடர்ந்து, நந்திவரம் -- கூடுவாஞ்சேரி கூட்டுக் குடிநீர் திட்டத்தில், மாமண்டூர் பாலாற்றில் புதிதாக நீர் உறிஞ்சு கிணறு மற்றும் பாலாற்றில் சேதமடைந்த குழாய்கள், தேசிய நெடுஞ்சாலையில் சேதமடைந்த பிரதான குழாய்களை மாற்றுதல் உள்ளிட்ட பணிகள் செய்ய முடிவெடுக்கப்பட்டது.
இதற்கு, மாநில நிதி ஆணையத்தின் ஊக்க நிதியிலிருந்து நான்கு கோடி ரூபாய், மறைமலை நகர் நகராட்சி பொது நிதியில் இருந்து, 70 லட்சம் ரூபாய் என, மொத்தம் 4.7 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, அரசு உத்தரவிட்டது.
செங்கல்பட்டு அடுத்த மாமண்டூர் பாலாற்றில், கூட்டுக் குடிநீர் திட்டத்தில், நீர் உறிஞ்சு கிணறு மற்றும் குழாய்கள் அமைக்கும் பணியை, கடந்த ஆண்டு முடித்தனர்.
நந்திவரம் -- கூடுவாஞ்சேரி கூட்டுக் குடிநீர் திட்டத்தில், மாமண்டூர் பாலாற்றில் இருந்து, தினமும் 21.70 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டது.
இதில் இருந்து, நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு, 6.5 லட்சம் லிட்டர் வினியோகம் செய்தனர். இதனால், 20,000க்கும் மேற்பட்ட மக்கள் பயன்பெற்று வந்தனர்.
கடந்த சில மாதங்களாக, 2 லட்சம் லிட்டர் குடிநீர் மட்டுமே வினியோகம் செய்து வருகின்றனர். இதனால், அனைத்து மக்களுக்கும் குடிநீர் வழங்க முடியாத சூழல் உள்ளது.
இதன் காரணமாக, 20,000க்கும் மேற்பட்டோர் கடும் பாதிப்படைந்து உள்ளனர். எனவே, நகரவாசிகள் நலன் கருதி, குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை வலுத்துள்ளது.
ஒரு வாரத்தில் சீராகும்
குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு தினமும், 2 லட்சம் முதல் 4 லட்சம் லிட்டர் வரை தண்ணீர் வினியோகம் செய்து வருகிறோம். இந்த குடிநீர் திட்டத்தில், 15 கி.மீ., துாரம், 45 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட குழாய்கள், ஆங்காங்கே உடைந்து உள்ளன. குழாய்களை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஒரு வாரத்தில் குடிநீர் வினியோகம் முழுமையாக செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.