/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நந்திவரம் - டிபன்ஸ் காலனியில் சிறுவர் பூங்கா சீரமைக்கப்படுமா?
/
நந்திவரம் - டிபன்ஸ் காலனியில் சிறுவர் பூங்கா சீரமைக்கப்படுமா?
நந்திவரம் - டிபன்ஸ் காலனியில் சிறுவர் பூங்கா சீரமைக்கப்படுமா?
நந்திவரம் - டிபன்ஸ் காலனியில் சிறுவர் பூங்கா சீரமைக்கப்படுமா?
ADDED : மார் 14, 2024 10:30 PM

கூடுவாஞ்சேரி:நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி, நந்திவரம் டிபன்ஸ் காலனி, 28வது வார்டுக்கு உட்பட்ட குபேரன் நகரில், 150 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இப்பகுதியில் சிறுவர் பூங்கா ஒன்று உள்ளது. இந்த பூங்காவில், சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், ஊஞ்சல் மற்றும் சறுக்கு விளையாட்டு உபகரணங்கள் பழுதடைந்து உள்ளன.
பூங்காவை சுற்றி பெரியவர்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் பாதையும் சேதமாகி உள்ளது.
இதை சீரமைத்துத் தர வேண்டி, நகராட்சி தலைவர் கார்த்திக் மற்றும் கமிஷனர் தாமோதரன் ஆகியோரிடம் அப்பகுதிவாசிகள் மனு அளித்தனர்.
அதன் அடிப்படையில், பூங்காவில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்வதற்காக நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் துவங்கிய நிலையில், நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
எனவே, பூங்கா பராமரிப்பு பணிகளை விரைந்து முடித்து, பயன்பாட்டிற்கு திறக்கப்பட வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.