/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இந்தியாவை காப்பவர் நரேந்திர மோடி: மதுராந்தகத்தில் அண்ணாமலை பேச்சு
/
இந்தியாவை காப்பவர் நரேந்திர மோடி: மதுராந்தகத்தில் அண்ணாமலை பேச்சு
இந்தியாவை காப்பவர் நரேந்திர மோடி: மதுராந்தகத்தில் அண்ணாமலை பேச்சு
இந்தியாவை காப்பவர் நரேந்திர மோடி: மதுராந்தகத்தில் அண்ணாமலை பேச்சு
ADDED : பிப் 26, 2024 12:41 AM

சித்தாமூர் : செய்யூர் மற்றும் மதுராந்தகம் சட்டசபை தொகுதிகளின் என் மண் என் மக்கள் யாத்திரை, சித்தாமூர் கூட்டு சாலையில் நேற்று நடந்தது.
அதில், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது: 'என் மண்; என் மக்கள்' யாத்திரை, செய்யூர் மற்றும் மதுராந்தகம் சட்டசபை தொகுதியில், கடந்த டிச., 20ம் தேதி நடக்க இருந்தது. கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
மதுராந்தகத்தில் புகழ்பெற்ற ஏரிகாத்த ராமர் கோவில் உள்ளது. தற்போது, குழந்தை ராமருக்கு அயோத்தியில் கோவில் அமைக்கப்பட்டு உள்ளது.
மதுராந்தகம் ஏரி உடையாமல் எப்படி ஏரிகாத்த ராமர் காப்பாற்றினாரோ, அதேபோல சென்னை மக்களை முதலமைச்சர் காப்பாற்றி உள்ளார்.
ஆகையால், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஏரிகாத்த ராமர் என்ற பட்டத்தை வழங்குகிறேன் என, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சமீபத்தில் கூறினார்.
சென்னை வெள்ளம் வந்த போது முதலமைச்சர் மற்றும் தி.மு.க., கட்சியினர் யாரையும் காணோம்; சென்னை வெள்ளத்தில் மக்களுக்கு சேவை செய்தது பா.ஜ., கட்சியினர்.
தென் தமிழகத்தில் வெள்ளம் வந்தபோது, முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லியில் கூட்டணி பேச்சு நடத்தினார்.
இந்தியாவை காக்கக் கூடிய ராமராக, நாட்டு மக்களின் வளர்ச்சிக்காக, ஏழை மக்களின் மேம்பாட்டிற்காக, விவசாயத்தின் மறுமலர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபடுபவர் பிரதமர் மோடி.
இந்தியாவை காக்கும் ராமர் என பட்டம் வழங்க வேண்டும் எனில், மோடி அவர்களுக்கு மட்டுமே வழங்க முடியும்.
சுமார் 2,411 ஏக்கர் பரப்பளவு கொண்ட மதுராந்தகம் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மதுராந்தகத்தில் அரசு கலைக் கல்லுாரி, தொழிற்போட்டை அமைக்கப்படும் என, தி.மு.க., தேர்தல் வாக்குறுதி அளித்தது. ஆனால், தற்போது வரை நிறைவேற்றவில்லை.
கடந்த தேர்தலில் வழங்கப்பட்ட 511 தேர்தல் வாக்குறுதியில், 20 வாக்குறுதியை கூட முழுமையாக நிறைவேற்றாமல், 90 சதவீத வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டதாக பொய் சொல்கின்றனர்.
வரும், 2026 தமிழகத்தில் பா.ஜ.க., ஆட்சிக்கு வந்தால், மதுபான கடைகள் மூடப்பட்டு கள் விற்பனை கடைகள் கொண்டு வரப்படும்.
மாவட்டந்தோறும் காமராஜர் பெயரில் இரண்டு நவோதயா பள்ளிகள் திறக்கப்படும். விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 15,000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.

