/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தேசிய பெண் குழந்தைகள் தின விருது விண்ணப்பிக்க அழைப்பு
/
தேசிய பெண் குழந்தைகள் தின விருது விண்ணப்பிக்க அழைப்பு
தேசிய பெண் குழந்தைகள் தின விருது விண்ணப்பிக்க அழைப்பு
தேசிய பெண் குழந்தைகள் தின விருது விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : செப் 02, 2025 01:03 AM
செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்டத்தில், தேசிய பெண் குழந்தைகள் தின விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கலெக்டர் சினேகா அறிக்கை:
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில், பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்கு சிறப்பாக பங்காற்றும் 13 வயதிற்கு மேல், 18 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு விருது வழங்கப்பட உள்ளது.
தேசிய பெண் குழந்தை தினமான வரும் 2026 ஜன., 24ம் தேதி, மாநில அரசின் விருதுக்கான காசோலை 1 லட்சம் ரூபாய் மற்றும் பாராட்டு பத்திரமும் வழங்கப்பட உள்ளது.
மேற்படி விருதுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தமிழகத்தைச் சேர்ந்த பெண் குழந்தைகள், பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, குழந்தை திருமணத்தை தடுத்தல் மற்றும் தவிர்த்தல், தனித்துவமான சாதனை செய்திக்க வேண்டும்.
மேலும், பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூடநம்பிக்கைகள் போன்ற அம்சங்களில் வீர தீர செயல் புரிந்திருக்க வேண்டும்.
விருதுகளை பெற விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுடைய பெண் குழந்தைகள், தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் (https;//awards.tn.gov.in) வரும் நவ., 30க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இணையத்தில் பதிவு செய்த பிறகு, அனைத்து ஆவணங்களையும் கையேடாக தயார் செய்து தமிழ், ஆங்கிலத்தில் அச்சு செய்யப்பட்ட தலா மூன்று நகல்களை, வரும் டிச., 5ம் தேதி மாலை 5:45 மணிக்குள், செங்கல்பட்டு மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
செங்கல்பட்டில், ஊரக வளர்ச்சித் துறையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக, 13 சாலை ஆய்வாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களை, செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைக்கு பணியமர்த்த, தேர்வாணையம் உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து, செங்கல்பட்டு கலெக்டர் கூட்ட அரங்கில், சாலை பணியாளர்கள் 13 பேருக்கு, பணி ஆணையை, கலெக்டர் சினேகா, நேற்று வழங்கினார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.