/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தேசிய அளவிலான சிலம்பம் செய்யூர் மாணவர் சாதனை
/
தேசிய அளவிலான சிலம்பம் செய்யூர் மாணவர் சாதனை
ADDED : ஆக 09, 2025 01:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு:தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில், செயின்ட் எக்ஸ்புரி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவர் சாதனை படைத்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், செய்யூரில் உள்ள செயின்ட் எக்ஸ்புரி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி, ஏழாம் வகுப்பு மாணவர்புவனேஸ்வர், ஸ்கூல் கேம்பஸ் ஆக்டிவிட்டி டெவலப்மென்ட் பவுண்டேஷன் இந்தியா நடத்திய, தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் பங்கேற்றார்.
இதில், ஜூனியர் பிரிவில் முதலிடம் பிடித்து, தங்கப்பதக்கம் வென்றுள்ளார். மேலும், இலங்கையில் நடைபெற உள்ள சர்வதேச சிலம்பப் போட்டியில் பங்கு பெறுவதற்கான தகுதியைப் பெற்றுள்ளார்.