/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு
/
தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு
ADDED : ஜன 26, 2025 01:41 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டில், தேசிய வாக்காளர் தினத்தையொட்டி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி, நடந்தது.
செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, வாக்காளர் உறுதிமொழி, கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், அரசு ஊழியர்கள், நேற்று, எடுத்துக்கொண்டனர். வாக்காளர் தினத்தை முன்னிட்டு, பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு, ஓவியப்போட்டி, கட்டுரைப்போட்டிகளில், முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு, பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினர். கோலப்போட்டி நடந்தது.
முன்னதாக, செங்கல்பட்டு சப்- கலெக்டர் வளாகத்தில், தேசிய வாக்காளர் தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணியை, கலெக்டர் அருண்ராஜ் துவக்கி வைத்தார். சப்- கலெக்டர் நாராயணசர்மா, தேர்தல் பிரிவு தாசில்தார் சிவசங்கரன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.