/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சர்வதேச யோகா நிறுவனத்தில் இயற்கை உணவு கண்காட்சி
/
சர்வதேச யோகா நிறுவனத்தில் இயற்கை உணவு கண்காட்சி
ADDED : நவ 20, 2024 01:18 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்ட சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவனம் சார்பில், 7வது இயற்கை மருத்துவ தினத்தையொட்டி, இயற்கை மருத்துவ முகாம் மற்றும் இயற்கை உணவு கண்காட்சி, இயக்குனர் வெங்கடேஷ்வரன் தலைமையில், நேற்று முன்தினம் நடந்தது.
இந்த கண்காட்சியை, கலெக்டர் அருண்ராஜ் துவக்கி வைத்தார். இதில், இயற்கை மருத்துவத் துறை தலைவர் பாண்டியராஜா, கோகுலம் பள்ளி முதல்வர் சங்கரநாராயணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இயற்கை கண்காட்சியில், பாரம்பரிய உணவு விதைகளை அழியாமல் பாதுகாத்து, இயற்கை முறையில் விளைவித்து தரும் இயற்கை விவசாயிகளின் அங்காடிகள் இடம்பெற்றன.
மேலும், கண்காட்சியில் செங்கல்பட்டை சுற்றியுள்ள தனியார் பள்ளி மாணவர்கள் பங்கேற்று, இயற்கை கண்காட்சியில் வைத்திருந்த இயற்கை உணவு மற்றும் இயற்கை முறை சிகிச்சைகள் குறித்து தெரிந்துகொண்டனர்.