ADDED : பிப் 03, 2024 12:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், நுங்கம்பாக்கம், அன்னை தெரசா மகளிர் வளாகத்தில், இன்றும், நாளையும் இயற்கை சந்தை நடக்க உள்ளது.
இதில், பல மாவட்டங்களில், மகளிர் சுய உதவிக் குழுக்களால் உற்பத்தி செய்யப்படும், பாரம்பரிய அரிசிகள், சிறுதானிய மற்றும் சிறுதானிய மதிப்பு கூட்டு பொருட்கள், காய்கறிகள் மற்றும் கீரைகள், பனை ஓலை பொருட்கள் போன்ற இயற்கை சார்ந்த பொருட்கள் விற்கப்பட உள்ளது.
மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தயார் செய்யும், பல்சுவை உணவு பொருட்களும் கிடைக்கும்.
பொதுமக்கள், இயற்கை சந்தையை பார்வையிட்டு, சுய உதவிக்குழுவினரின் உற்பத்தி பொருட்களை வாங்கி மகிழ வேண்டும் என, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க மேலாண்மை இயக்குனர் திவ்யதர்சினி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

