/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நித்ய கல்யாண ஈஸ்வரர் கோவிலில் நவராத்திரி
/
நித்ய கல்யாண ஈஸ்வரர் கோவிலில் நவராத்திரி
ADDED : அக் 14, 2024 06:31 AM
மாமல்லபுரம் : மாமல்லபுரம் அடுத்த குழிப்பாந்தண்டலம் பகுதியில், மங்களாம்பிகை உடனுறை நித்ய கல்யாண ஈஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், கடந்த அக்., 3ம் தேதி நவராத்திரி உற்சவம் துவக்கப்பட்டது.
தினசரி மாலை அம்பாளுக்கு அபிஷேகம் செய்து, மகா தீபாராதனையுடன் வழிபட்டனர். சுமங்கலி பெண்களுக்கு, மங்கல சீர்வரிசை பொருட்கள் அளிக்கப்பட்டது.
இறுதி நாளான நேற்று முன்தினம் காலை, அம்மனுக்கு மஹா அபிஷேகம் செய்து, மாலை கயிலாய வாத்தியங்கள் முழங்கி, மஹா தீபாராதனையுடன் வழிபட்டனர்.
பள்ளி மாணவ - மாணவியருக்கு போட்டிகள் நடத்தி, குறிப்பேடு, பேனா வழங்கினர். தமிழர் நல ஆன்மிகம் மற்றும் பாரம்பரிய ஒருங்கிணைப்பு மையம் சார்பில், கலைப் போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது.
இரவு, மீனாட்சி அம்மன் அலங்காரத்தில், அம்பாள் ஊஞ்சல் சேவையாற்றி, வீதியுலா சென்றார். பக்தர்கள் தரிசித்து வழிபட்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது.