/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வேதகிரீஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா நாளை துவக்கம்
/
வேதகிரீஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா நாளை துவக்கம்
வேதகிரீஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா நாளை துவக்கம்
வேதகிரீஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா நாளை துவக்கம்
ADDED : செப் 21, 2025 01:25 AM
திருக்கழுக்குன்றம்,:திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில், திரிபுரசுந்தரி அம்மனுக்கு, நாளை நவராத்திரி உத்சவம் துவங்குகிறது.
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்றது.
வேதகிரீஸ்வரரின் அம்பாளான திரிபுரசுந்தரி அம்மனுக்கு, நாளை முதல், வரும் 30ம் தேதி வரை, நவராத்திரி உத்சவம் நடத்தப்படுகிறது.
இதை முன்னிட்டு, தினமும் மாலை 5:00 மணிக்கு, உற்சவ அம்பாள் சிறப்பு அபிஷேகம் கண்டு, தினம் ஒரு திருக்கோலத்தில், பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
அஷ்டகந்த மூலிகையாலான அம்பாளிற்கு, தினசரி பாத அபிஷேகம் மட்டுமே செய்து, ஆண்டில் மூன்று நாட்கள் மட்டுமே, முழு அபிஷேகம் செய்யப்படுகிறது.
நவராத்திரி உத்சவ இறுதி நாளான 30ம் தேதி, முழு அபிஷேகம் செய்யப்படுகிறது.