/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் கட்டையால் முட்டுக்கொடுத்து அலட்சியம்
/
தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் கட்டையால் முட்டுக்கொடுத்து அலட்சியம்
தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் கட்டையால் முட்டுக்கொடுத்து அலட்சியம்
தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் கட்டையால் முட்டுக்கொடுத்து அலட்சியம்
ADDED : ஜூன் 23, 2025 11:38 PM

சிங்கபெருமாள் கோவில்,
காட்டாங்கொளத்துார் ஒன்றியம், பாலுார் மின் வாரிய அலுவலகத்தில் இருந்து கரும்பாக்கம், குருவன்மேடு, ரெட்டிப்பாளையம் மேலச்சேரி, கொளத்தாஞ்சேரி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இதற்காக, பாலுார் மின் வாரிய அலுவலகம் வாயிலாக கம்பங்கள் அமைக்கப்பட்டு, மின் கம்பிகள் வாயிலாக மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இதில் கரும்பாக்கம், கொளத்தாஞ்சேரி, பாலுார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், விவசாய நிலங்களில் செல்லும் மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்வதால், ஆபத்தான நிலையில் விவசாய பணிகள் மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டு உள்ளது.
மேலும், அறுவடை காலங்களில் அறுவடை இயந்திரங்கள் செல்ல, தாழ்வாக உள்ள மின் கம்பிகள் தடையாக உள்ளன. இதனால், தனியாக ஆட்களை நியமித்து, மரக்கிளைகளைக் கொண்டு மின் கம்பிகளை உயர்த்தும் நிலை ஏற்பட்டு உள்ளது.
கரும்பாக்கம் -- கொளத்தாஞ்சேரி சாலையில் தாழ்வாக மின் கம்பிகள் செல்வதால், வாகனங்கள் செல்ல மரக்கட்டைகள் கொண்டு முட்டுக் கொடுத்து, உயர்த்தி அமைக்கப்பட்டு உள்ளது.
பலத்த காற்று வீசினால் மரக்கட்டை முறிந்து விழுந்து, விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, மின் வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, பாலுார் மின் வாரிய அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில், தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை உயர்த்தி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.