/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மின்வாரிய ஆபீசை முற்றுகையிட்டு நெம்மேலி கிராமத்தினர் போராட்டம்
/
மின்வாரிய ஆபீசை முற்றுகையிட்டு நெம்மேலி கிராமத்தினர் போராட்டம்
மின்வாரிய ஆபீசை முற்றுகையிட்டு நெம்மேலி கிராமத்தினர் போராட்டம்
மின்வாரிய ஆபீசை முற்றுகையிட்டு நெம்மேலி கிராமத்தினர் போராட்டம்
ADDED : ஜூலை 17, 2025 01:20 AM

திருப்போரூர்:சீரான மின்சாரம் வழங்க வலியுறுத்தி, நெம்மேலி ஊராட்சி பகுதி மக்கள், கோவளம் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.
திருப்போரூர் ஒன்றியம், இ.சி.ஆர்., சாலையில், நெம்மேலி ஊராட்சியை சார்ந்த நெம்மேலி, சூளேரிக்காட்டுக்குப்பம் உள்ளிட்ட பகுதி மக்கள், பழுதடைந்த மின் கம்பங்கள் மாற்றுதல், சீரான மின்சாரம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று கோவளம் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:
எங்கள் கிராமத்தில் 30 ஆண்டுகளாக மின் கம்பங்கள், மின் இணைப்பு கம்பிகள், டிரான்ஸ்பார்மர் உள்ளிட்டவை மாற்றப்படாமல் உள்ளன. இதனால் நான்கு மாதங்களாக மின்கம்பங்கள் அறுந்து விழுகின்றன.
இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். ஒரு நாளைக்கு மூன்று முறை மின் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. விலை உயர்ந்த வீட்டு உபயோக பொருட்கள், 'ஏசி', வாஷிங் மிஷின் உள்ளிட்டவை பழுதாகின்றன.
குறிப்பாக, இரவு நேரங்களில் பெரியவர்கள் மற்றும் சிறு குழந்தைகள் சிரமப்படுகின்றனர். பள்ளி மாணவர்கள் படிப்பதற்கும் மிகவும் சிரமப்படுகிறனர்.
கோவளம் மின்சார வாரியத்திற்கு பலமுறை தகவல் தெரிவித்தும், எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எங்கள் கிராமத்திற்கு சீரான மின்சாரம் வழங்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.