/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பெண்ணிடம் நுாதன முறையில் செயின் பறித்த நபருக்கு வலை
/
பெண்ணிடம் நுாதன முறையில் செயின் பறித்த நபருக்கு வலை
பெண்ணிடம் நுாதன முறையில் செயின் பறித்த நபருக்கு வலை
பெண்ணிடம் நுாதன முறையில் செயின் பறித்த நபருக்கு வலை
ADDED : அக் 22, 2024 08:30 PM
கூடுவாஞ்சேரி:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், பெருமாட்டுநல்லுார் ஊராட்சி, பாண்டூர் பகுதியில் வசித்து வருபவர் பாலசுந்தரம், 40. அவரது மனைவி காசியம்மாள், 36.
இருவரும், இருசக்கர வாகனத்தில் பாண்டூரில் இருந்து கூடுவாஞ்சேரி நோக்கி, நெல்லிக்குப்பம் பிரதான சாலையில், நேற்று முன்தினம் நண்பகல் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, அவர்களுக்கு பின்னால் பல்சர் இருசக்கர வாகனத்தில், நம்பர் பிளேட் இல்லாமல் வந்த மர்ம நபர் ஒருவர், இவர்களது இருசக்கர வாகனத்தின் மீது மோதினார்.
அதன்பின், கீழே விழுந்த தம்பதிக்கு உதவி செய்வது போல் நடித்து, இருசக்கர வாகனத்தை துாக்கி நிறுத்துவது போல் பாசாங்கு செய்து, காசியம்மாள் அணிந்திருந்த மூன்று சவரன் தங்க செயினை பறித்துக்கொண்டு, பல்சர் வாகனத்தில் தப்பினார்.
இது தொடர்பாக, போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு, பாலசுந்தரம் தகவல் தெரிவித்தார். அதன்படி, கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த 'சிசிடிவி' கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, நுாதன முறையில் தாலி செயினை பறித்து சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.