/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
லோக்சபா தேர்தல் புகார் அளிக்க புதிய செயலி
/
லோக்சபா தேர்தல் புகார் அளிக்க புதிய செயலி
ADDED : மார் 19, 2024 10:06 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு:லோக்சபா தேர்தலில், வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் கொடுத்தால், சி-விஜில் இன்வெஸ்டிகேட்டர் - Cvigil Investigator என்ற செயலியில், பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.
இச்செயலியில் புகார் அளிக்கப்பட்டு, 15 நிமிடங்களில், தேர்தல் பறக்கும் படையினர் நிகழ்விடத்தை சென்றடையும்.
பின், 30 நிமிடங்களில் புகார் குறித்து புலனாய்வு செய்து, தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அறிக்கை அனுப்பி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலரால் உரிய முடிவு எடுக்கப்படும். ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம் லோக்சபா தொகுதிகளில், இந்த செயலியை பயன்படுத்தி புகார் அளிக்கலாம்.

