/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
காவல் பயிற்சி தலைமையகத்தில் புதிய தானியங்கி தளம் அறிமுகம்
/
காவல் பயிற்சி தலைமையகத்தில் புதிய தானியங்கி தளம் அறிமுகம்
காவல் பயிற்சி தலைமையகத்தில் புதிய தானியங்கி தளம் அறிமுகம்
காவல் பயிற்சி தலைமையகத்தில் புதிய தானியங்கி தளம் அறிமுகம்
ADDED : ஆக 02, 2025 12:38 AM

வண்டலுார்,:வண்டலுார் அடுத்த ஊனமாஞ்சேரியில் இயங்கி வரும் தமிழ்நாடு காவல் பயிற்சி தலைமையகத்தின் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கத்தில், புதிய மென்பொருளை உள்ளடக்கிய இரண்டு புதிய தானியங்கி தளங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழ்நாடு காவல் பயிற்சி தலைமையக நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
காவல் துறை பயிற்சியகத்தின் செயல்பாடுகளில் திறமையான நிர்வாகம், வெளிப்படைத் தன்மை, பொறுப்புணர்வு ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கில், புதிய தானியங்கி தளங்கள் வடிவமைக்க, கடந்த சில மாதங்களாக தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி, டி.எஸ்.ஆர்., எனப்படும் தினசரி சூழ்நிலை அறிக்கை மற்றும் டி.எம்.எஸ்., எனப்படும் பயிற்சி மேலாண்மை அமைப்பு ஆகிய இரு செயல்பாடுகளிலும் புதிய தானியங்கி தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த தானியங்கி தளங்களின் மென்பொருளை கையாளும் வகையில் டி.எஸ்.ஆர்., பிரிவில் 35 காவல் துறை அதிகாரிகளுக்கும், டி.எம்.எஸ்., பிரிவில் 166 காவல் அதிகாரிகளுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த தானியங்கி தளங்கள் வாயிலாக பணிச்சுமை குறையும். பிழைகள் தவிர்க்கப்படும். வெளிப்படையான மற்றும் பொறுப்பான பயிற்சி வழங்குதல் எளிதில் சாத்தியப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.