/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கடலுார் சாலை சந்திப்பில் புதிய பாலம் அமைப்பு
/
கடலுார் சாலை சந்திப்பில் புதிய பாலம் அமைப்பு
ADDED : நவ 20, 2025 03:57 AM
கூவத்துார்: செங்கல்பட்டு மாவட்டம் கடலுார் கிராம சாலை சந்திப்பில், புதிய பாலம் கட்டபட்டுள்ளது.
மாமல்லபுரம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில், நான்குவழிப் பாதையாக மேம்படுத்தும் பணி 2022ல் துவக்கப்பட்டு நடக்கிறது. இதில், கூவத்துார் அடுத்த, கடலுார் பகுதியில், கடலுார் - காத்தங்கடை சாலை குறுக்கிடுகிறது.
இச்சந்திப்பின் வடக்கில் கால்வாயிலும், தெற்கில் சின்னாற்றிலும், புதுச்சேரி சாலைக்கான பாலங்கள் கட்டப்பட்டன. பாலங்களை இணைக்கும் சாலை, கிராம சாலை சந்திப்பில், தாழ்வாக துவங்கி, படிப் படியாக உயர்ந்தது.
எனவே, சந்திப்பு பகுதியில், புதுச்சேரி சாலையின் கீழ், கிராம சாலையில் வாகனங்கள் கடக்க, பாலம் கட்டுவது தவிர்க்கப்பட்டது. அணுகு சாலை வழியே, கால்வாய், ஆற்று பாலங்களின் கீழ் செல்ல அறிவுறுத்தப்பட்டது.
இதை அப்பகுதியினர் ஏற்க மறுத்து, கிராம சாலை சந்திப்பில் பாலம் அமைக்க கோரி, தொடர்ந்து போராடினர். இதையடுத்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தற்போது பாலம் கட்டியுள்ளது.

