/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புழுதிவாக்கம் காமராஜர் நகரில் புதிய பஸ் நிறுத்தம் அறிவிப்பு
/
புழுதிவாக்கம் காமராஜர் நகரில் புதிய பஸ் நிறுத்தம் அறிவிப்பு
புழுதிவாக்கம் காமராஜர் நகரில் புதிய பஸ் நிறுத்தம் அறிவிப்பு
புழுதிவாக்கம் காமராஜர் நகரில் புதிய பஸ் நிறுத்தம் அறிவிப்பு
ADDED : நவ 15, 2024 01:24 AM

மதுராந்தகம்:மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட சூரை ஊராட்சியில், சித்தாலமங்கலம், புழுதிவாக்கம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.
மதுராந்தகத்திலிருந்து உத்திரமேரூர் பகுதிக்கு, தடம் எண் 17 மற்றும் 221ஏ ஆகிய டவுன் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்த பேருந்துகள், புழுதிவாக்கம் காமராஜர் நகர் பகுதியில், நின்று செல்வதில்லை. இதனால், பள்ளி மாணவ - மாணவியர் மற்றும் பொதுமக்கள், அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு நடந்து சென்று, பேருந்தில் பயணம் செய்து வந்தனர்.
இப்பகுதியில் பேருந்து நிறுத்தம் அறிவிக்கக் கோரி, மதுராந்தகம் போக்குவரத்து மேலாளர் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகளிடம், அப்பகுதிவாசிகள் மனு அளித்தனர்.
இந்நிலையில், மனுவை பரிசீலனை செய்த மதுராந்தகம் போக்குவரத்து மேலாளர், புழுதிவாக்கம் காமராஜர் நகர் பகுதியில் ஆய்வு செய்தார்.
பின், மக்களின் தேவை அறிந்து, பேருந்து நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பகுதி வழியாக செல்லும் அரசு பேருந்துகள் நின்று செல்லும் வகையில், நேற்று புழுதிவாக்கம் காமராஜர் நகர் பேருந்து நிறுத்தம் என, அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.