/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கிளாம்பாக்கம் முனையத்தில் ஆட்டோக்களுக்கு புதிய கட்டுப்பாடு?
/
கிளாம்பாக்கம் முனையத்தில் ஆட்டோக்களுக்கு புதிய கட்டுப்பாடு?
கிளாம்பாக்கம் முனையத்தில் ஆட்டோக்களுக்கு புதிய கட்டுப்பாடு?
கிளாம்பாக்கம் முனையத்தில் ஆட்டோக்களுக்கு புதிய கட்டுப்பாடு?
ADDED : பிப் 12, 2025 08:45 PM
கிளாம்பாக்கம்:கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இளம் பெண் கடத்தப்பட்ட விவகாரத்தின் எதிரொலியாக, ஆட்டோக்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்க, போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் கடந்த பிப். 3 அன்று, 19 வயது பெண் ஒருவர் ஆட்டோவில் கடத்தப்பட்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இருவர் கைது செய்யப்பட்டு, 'மாவுக் கட்டுடன்' சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், தாம்பரம் மாநகர போக்குவரத்து காவல் துறை சார்பில், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு வந்து செல்லும் ஆட்டோக்களை முறைப்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
அதற்காக சி.எம்.டி.ஏ, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர், வட்டார போக்குவரத்து அலுவலர் உள்ளிட்டோரிடம் ஆலோசனை செய்து, இங்கு வந்து செல்லும் ஆட்டோக்களை முறைப்படுத்த உள்ளனர்.
அதன்படி, ஆட்டோ ஓட்டுநர் விபரம், அவர்கள் மீது ஏதேனும் குற்ற வழக்குகள் உள்ளதா, ஆட்டோ உரிமையாளர்கள் கடிதம், ஆட்டோக்களின் ஆவணங்கள் சரிபார்ப்பு என, ஒழுங்குபடுத்த புதிய திட்டம் உருவாக்கும் முயற்சியில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்பேருந்து முனையம் செயல்பட துவங்கிய பின், 16 தொழிற்சங்கள் வாயிலாக, இதுவரை 1500 ஆட்டோக்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு மட்டுமே பேருந்து முனையத்திற்குள் வந்து செல்ல அனுமதி உண்டு. இந்நிலையில், சமீப காலமாக, அனுமதி பெறாத ஆட்டோக்களும் உள்ளே வந்து செல்ல அனுமதிக்கப்பட்டது.
இது குறித்து காவல்துறையினரிடம் கேட்டபோது, 'ஏற்கனவே இருக்கும் நடைமுறையே தற்போது பின்பற்றப்படுகிறது. அனைத்து துறை அதிகாரிகளுடன் உரிய ஆலோசனை செய்து, ஆட்டோக்கள் வந்து செல்வதில் புதிய கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்படும்' என்றனர்.