/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குப்பை சேகரிக்க புதிய வாகனங்கள்
/
குப்பை சேகரிக்க புதிய வாகனங்கள்
ADDED : ஜன 28, 2024 04:07 AM

திருப்போரூர: திருப்போரூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இங்கு 35,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இந்த பேரூராட்சியில் குடியிருப்புகள், கடைகள், மார்க்கெட், வணிக நிறுவனங்கள் போன்ற இடங்களில் இருந்து, தினமும் துாய்மை பணியாளர்கள் வாயிலாக குப்பை சேகரிக்கப்பட்டு வருகிறது.
இந்த பகுதியில் பல இடங்களில் குடியிருப்புகளுக்கு செல்லும் நடைபாதைகள் குறுகலாக உள்ளன. பணியாளர்கள் சேகரிக்கும் குப்பை, லாரிகளில் ஏற்றுவதற்கு சிரமமாக உள்ளது.
குப்பைகளை சேகரிப்பதற்காக, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 12.18 லட்சம் ரூபாய் மதிப்பில், 8 பேட்டரி வாகனங்கள், 14.6 லட்சம் ரூபாய் மதிப்பில், 2 மினி லோடு வாகனங்கள் வாங்கப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.