/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சுற்றித் திரியும் கால்நடைக்கு ரூ.2,000 அபராதம்; பட்டியில் அடைக்கும் நடைமுறை மீண்டும் அமல்.. கலெக்டர் அதிரடி!
/
சுற்றித் திரியும் கால்நடைக்கு ரூ.2,000 அபராதம்; பட்டியில் அடைக்கும் நடைமுறை மீண்டும் அமல்.. கலெக்டர் அதிரடி!
சுற்றித் திரியும் கால்நடைக்கு ரூ.2,000 அபராதம்; பட்டியில் அடைக்கும் நடைமுறை மீண்டும் அமல்.. கலெக்டர் அதிரடி!
சுற்றித் திரியும் கால்நடைக்கு ரூ.2,000 அபராதம்; பட்டியில் அடைக்கும் நடைமுறை மீண்டும் அமல்.. கலெக்டர் அதிரடி!
ADDED : டிச 31, 2021 10:53 PM

செங்கல்பட்டு : சாலை மற்றும் விவசாய நிலங்களில் சுற்றித் திரியும் கால்நடைகளை பிடிக்கவும், உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கவும், அதிரடி நடவடிக்கை துவங்கியுள்ளது. மாடுகளை பட்டியில் அடைத்து வைக்கும், 'பவுண்டு' எனப்படும் நடைமுறையை அமல்படுத்தும்படி, 359 நகராட்சிகளுக்கும், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் உத்தரவிட்டுள்ளார்.
நேற்று முதல் அமலுக்கு வந்துள்ள இந்நடவடிக்கையில், விவசாய நிலங்களை சேதப்படுத்தும் கால்நடைகளை கட்டுப்படுத்துவதற்காக, அவற்றை பிடித்து பட்டியில் அடைத்து வைத்து, அபராதம் வசூலிக்கும் நடைமுறை, 30 ஆண்டுகளுக்கு முன் இருந்தது. போக்குவரத்து நெரிசல்அபராதத் தொகையை, கிராம நிர்வாக அலுவலரிடம் செலுத்தி, மாடுகளை உரிமையாளர்கள் மீட்டு செல்வது வழக்கம். 'பவுண்டு' நடைமுறை என, இது அழைக்கப்பட்டது. அதன்பின், 30 ஆண்டுகளாக இந்த நடைமுறை கிடப்பில் போடப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டத்தில், புனித தோமையார் மலை, திருப்போரூர், காட்டாங்கொளத்துார், திருக்கழுக்குன்றம், அச்சிறுப்பாக்கம், சித்தாமூர், லத்துார் ஆகிய ஊராட்சி ஒன்றிய பகுதிகள் உள்ளன. இந்த ஊராட்சி ஒன்றியங்களில் தேசிய நெடுஞ்சாலை, கிழக்கு கடற்கரை சாலை, ஓ.எம்.ஆர்., சாலை, நெடுஞ்சாலை, மாவட்ட சாலைகளில், மாடுகள் சுற்றித் திரிகின்றன. இதனால், போக்குவரத்து நெரிசல், சாலை விபத்துகள் ஏற்படுகிறது.
ஊராட்சி பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில், விலை பொருட்களை, ஆடு, மாடுகள் சேதப்படுத்துகின்றன. இவற்றால் விபத்துகளும் ஏற்படுகிறது. இதை கட்டுப்படுத்த பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். 'பவுண்டு' நடைமுறைஅதைத் தொடர்ந்து, தமிழகத்திலேயே, செங்கல்பட்டு மாவட்டத்தில் முதல் முறையாக, மீண்டும் 'பவுண்டு' எனப்படும் கால்நடைகளை பிடித்து பட்டியில் அடைக்கும் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.
இதன்படி, சாலைகள்,வயல்வெளிகள் மற்றும் பொது இடங்களில் சுற்றித் திரியும் கால்நடைகளை பிடித்து, பவுண்டில்அடைக்க மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக, அனைத்து மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு, கான்பரன்ஸ் வாயிலாக, ஊராட்சிகள் உதவி இயக்குனர் ஆனந்தன் நேற்று உத்தரவிட்டார். 'மாவட்டத்தில் உள்ள 359 ஊராட்சிகளிலும், பவுண்டு அமைக்க வேண்டும். சுற்றித் திரியும் ஆடு, மாடுகளை அவற்றில் அடைக்க வேண்டும். மாட்டின் உரிமையாளர்களுக்கு, ஒரு நாளுக்கு 2,000 ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும்' என, அவர் கூறினார்.
இந்நிலையில், காட்டாங்கொளத்துார் ஊராட்சி ஒன்றியம், கொண்டமங்கலம் ஊராட்சியில், மாவட்ட அளவிலான கால்நடை பட்டி அமைக்கப்பட்டு உள்ளது. செங்கல்பட்டு அடுத்த, மலையடி வேண்பாக்கம், மாமண்டூர் ஆகிய பகுதியில், சாலையில் சுற்றித் திரிந்த மாடுகளை மடக்கி பிடித்து இதில் அடைத்தனர். 25 மாடுகள்செங்கல்பட்டு அடுத்த, மலையடி வேண்பாக்கம் பகுதியில், ஜி.எஸ்.டி., சாலையில் சுற்றித் திரிந்த 25 மாடுகளை, நேற்று, அதிகாரிகள் மடக்கி பிடித்தனர். இதையறிந்த மாட்டின் உரிமையாளர்கள், மாடுகளை விடுவிக்குமாறு கோரினர்.
அதன்பின், முதன்முறை என்பதால் மாடுகளை விடுவிக்கிறோம். மாடுகள் சாலையில் சுற்றித் திரிந்தால், அபராதம் மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, ஊராட்சி உதவி இயக்குனர் எச்சரித்து அனுப்பி வைத்தார்.செங்கல்பட்டு மாவட்டத்தில், சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து, பவுண்டில் அடைக்கப்படும். கால்நடைகளுக்கு, நாள் ஒன்றுக்கு, ௨,௦௦௦ ரூபாய் அபராதமாக உரிமையாளர்களிடம் வசூலிக்கப்படும்.
கால்நடைகளை ஒரு நாளைக்குள் மீட்டு செல்லவில்லை என்றால், கொண்டமங்கலம் ஊராட்சியில் மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள பவுண்டில் அடைக்கப்படும். கால்நடை மருத்துவ குழுவினர் மாடுகளை பராமரிப்பர். மாடுகளுக்கு தேவையான வைக்கோல், தண்ணீர் வசதிகள் எற்படுத்தப்பட்டுள்ளது.ஆ.ர.ராகுல்நாத், கலெக்டர், செங்கல்பட்டு.