/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாமல்லை - செங்கை இடையே இரவு பேருந்து இயக்கம்
/
மாமல்லை - செங்கை இடையே இரவு பேருந்து இயக்கம்
ADDED : டிச 25, 2025 06:13 AM
மாமல்லபுரம், டிச. 25-
நாட்டிய விழாவை முன்னிட்டு, மாமல்லபுரம் - செங்கல்பட்டு இடையே, இரவு 10:00 மணி வரை பேருந்து இயக்கப்படுகிறது.
அரசு போக்குவரத்து கழகத்தின், செங்கல்பட்டு பணிமனையில் இருந்து, செங்கல்பட்டு - மாமல்லபுரம் இடையே, தடம் எண் 508 பேருந்து, 30 நிமிடங்களுக்கு ஒரு பஸ் வீதம் இயக்கப்படுகிறது. மாமல்லபுரத்தில் இருந்து, செங்கல்பட்டிற்கு, இரவு 9:00 மணிக்கு கடைசி பேருந்து புறப்படும்.
மாமல்லபுரத்தில், கடந்த 21ம் தேதி முதல், இந்திய நாட்டிய விழா நடக்கிறது. ஜன., 19ம் தேதி வரை, விழா நடக்கும் நிலையில், தினமும் விழா முடிந்து, பயணியர் செல்லும் வகையில், பேருந்து இயக்குமாறு, போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு கலெக்டர் சினேகா அறிவுறுத்தினார்.
இதையடுத்து, விழா முடியும் வரை, மாமல்லபுரத்தில் இருந்து, தினமும் இரவு 10:00 மணிக்கு, செங்கல்பட்டிற்கு பேருந்து இயக்கப்படுவதாக, பணிமனை மேலாளர் மாறன் தெரிவித்தார்.

