/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மதுராந்தகம் ராமர் கோவிலுக்கு செயல் அலுவலர் நியமிக்க கோரிக்கை
/
மதுராந்தகம் ராமர் கோவிலுக்கு செயல் அலுவலர் நியமிக்க கோரிக்கை
மதுராந்தகம் ராமர் கோவிலுக்கு செயல் அலுவலர் நியமிக்க கோரிக்கை
மதுராந்தகம் ராமர் கோவிலுக்கு செயல் அலுவலர் நியமிக்க கோரிக்கை
ADDED : டிச 25, 2025 06:13 AM
மதுராந்தகம்:மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோவிலுக்கு, செயல் அலுவலர் நியமிக்க வேண்டுமென, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுராந்தகம் ஏரி காத்த கோதண்டராமர் கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது.
மூன்று மாதங்களுக்கு முன் ராமர்கோவில் செயல் அலுவலர், திருமலை வையாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
தற்போது, செயல் அலுவலர் பணியிடம் காலியாக இருப்பதால், நிர்வாகப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.
திருமலை வையாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் செயல் அலுவலர் மேகவண்ணன், மதுராந்தகம் ராமர் கோவிலுக்கு செயல் அலுவலராக கூடுதலாக கவனித்து வருகிறார்.
ஏரி காத்த கோதண்ட ராமர் கோவிலுக்கு, புதிய செயல் அலுவலரை நியமிக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.