/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கை மருத்துவமனை அருகே அமைகிறது நிழற்குடை
/
செங்கை மருத்துவமனை அருகே அமைகிறது நிழற்குடை
ADDED : ஜன 18, 2024 01:42 AM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு, தினமும், உள்நோயாளிகள் பிரிவு மற்றும் புறநோயாளிகள் பிரிவிற்கு, 3,000க்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்கின்றனர்.
மதுராந்தகம் - செங்கல்பட்டு சாலையில், மருத்துவமனை அருகில், பேருந்து நிழற்குடை அமைக்க வேண்டும் என, கலெக்டரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
அதன்பின், செங்கல்பட்டு எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு 2022- - 23ம் ஆண்டு நிதியில், 15 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, செங்கல்பட்டு தி.மு.க., - எம்.எல்.ஏ., வரலட்சுமி, மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
இந்நிதியை, செங்கல்பட்டு நகராட்சி நிர்வாகத்திற்கு அனுப்பி, பணிகளை விரைந்து முடிக்க, கலெக்டர் ராகுல்நாத், உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, பேருந்து நிழற்குடை கட்ட டெண்டர் விடப்பட்டு, தனியார் ஒப்பந்ததாரர்கள், பணிகள் துவக்கி உள்ளனர்.
இப்பணிகள் இரண்டு மாதங்களில் முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என, நகராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவித்தனர்.