/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
5 ஆண்டாக வேலை இல்லையா? இளைஞர்கள் உதவிபெற வாய்ப்பு!
/
5 ஆண்டாக வேலை இல்லையா? இளைஞர்கள் உதவிபெற வாய்ப்பு!
5 ஆண்டாக வேலை இல்லையா? இளைஞர்கள் உதவிபெற வாய்ப்பு!
5 ஆண்டாக வேலை இல்லையா? இளைஞர்கள் உதவிபெற வாய்ப்பு!
ADDED : ஜூலை 20, 2025 10:28 PM
செங்கல்பட்டு:வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற, செப்., 10க்குள் இளைஞர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என, செங்கல்பட்டு கலெக்டர் சினேகா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து செங்கல்பட்டு கலெக்டர் சினேகா வெளியிட்ட அறிக்கை:
பத்தாம் வகுப்பு தோல்வி, தேர்ச்சி, பிளஸ்2 மற்றும் இளங்கலை பட்டப்படிப்பு முடித்து, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பலரும் பதிவு செய்துள்ளனர்.
இவ்வாறு பதிவு செய்து, ஜூன் 30 நிலவரப்படி, ஐந்தாண்டுகளுக்கு மேலாக வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு, தமிழக அரசு சார்பில், உதவித்தொகை வழங்கப்படுகிறது.
உதவித்தொகை பெற, செங்கல்பட்டு மாவட்ட இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்களை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, செப்., 10க்குள், மேற்கண்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.