/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தொற்றா நோய்கள் வண்டலுாரில் கணக்கெடுப்பு
/
தொற்றா நோய்கள் வண்டலுாரில் கணக்கெடுப்பு
ADDED : ஏப் 02, 2025 09:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வண்டலுார்:உலக சுகாதார மையத்தின் அறிவுறுத்தல்படி, மத்திய அரசின் வழிகாட்டலோடு, தமிழக அரசு சார்பில், மாநிலத்தில் வசிப்போரிடையே தொற்றா நோய்கள் குறித்த கணக்கெடுப்பு துவக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, காட்டாங்கொளத்துார் ஒன்றியத்தில் முதற்கட்டமாக, வண்டலுார் ஊராட்சியில், தொற்றா நோய்கள் குறித்த கணக்கெடுப்பு, கடந்த இரு வாரங்களாக நடக்கிறது.
இதில், 1,000 குடும்பங்களைச் சேர்ந்த நபர்களிடம், சர்க்கரை அளவு மற்றும் ரத்த அழுத்தம் ஆகிய பரிசோதனைகள் வீடு தேடி வந்து நடத்தப்படுகின்றன.
தற்போது வரை, 500 குடும்பங்களிடம் இந்த பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாக, மாவட்ட சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

