/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பாலாற்று கரையோரம் 4 மாடி கட்டடம் அனுமதி ஆவணங்களை கேட்டு நோட்டீஸ்
/
பாலாற்று கரையோரம் 4 மாடி கட்டடம் அனுமதி ஆவணங்களை கேட்டு நோட்டீஸ்
பாலாற்று கரையோரம் 4 மாடி கட்டடம் அனுமதி ஆவணங்களை கேட்டு நோட்டீஸ்
பாலாற்று கரையோரம் 4 மாடி கட்டடம் அனுமதி ஆவணங்களை கேட்டு நோட்டீஸ்
ADDED : நவ 28, 2024 02:48 AM

மதுராந்தகம்,
மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்டு, பூதுார் ஊராட்சி உள்ளது. இதில், ஊராட்சி அலுவலக கட்டடம் அருகே, பாலாற்று கரை ஓரம், சென்னையை சேர்ந்த தனி நபர், ஆதரவற்றோர் தங்கும் விடுதி கட்டி வருவதாக கூறப்படுகிறது.
இது குறித்து அப்பகுதிவாசிகள் கூறியதாவது:
பூதுார் பாலாற்று கரை ஓரம், முறையான அனுமதி இல்லாமல், நான்கு அடுக்குமாடி கொண்ட கட்டடம் கட்டுமான பணியில், தனிநபர் ஈடுபட்டு வருகிறார்.
கட்டடம் கட்டுவதற்கு முன், முறையான மண் பரிசோதனை மட்டுமின்றி, எந்வித அனுமதியும் பெறவில்லை.
இப்பகுதியில், இவ்வளவு உயரமான கட்டடம் கட்டினால், நாளடைவில் கட்டடம் அடியோடு சாய்ந்து விபத்துக்குள்ளாக அதிக வாய்ப்பு உள்ளது.
இதனால், கட்டடத்தின் அருகில் வசிப்போரின் பாதுகாப்பு மட்டுமின்றி, எதிர்காலத்தில் கட்டடம் பயன்பாட்டுக்கு வரும்போது, அதில் இருப்பவர்களின் உயிருக்கு பேராபத்து ஏற்படும்.
இதனால், ஊராட்சி சார்பில், கிராம சபை கூட்டத்தில், கட்டடத்தை அகற்ற தீர்மானம் இயற்றி, கட்டட உரிமையாளருக்கு முறையான விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதுவரை, எவ்வித பதிலும் வரவில்லை.
அதனால், பூதுார் கிராம மக்கள் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர், கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கருத்துக்கேட்பு கூட்டத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசனிடம் மனு அளித்தனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அதைத்தொடர்ந்து, நேற்று மாவட்ட நகரம் மற்றும் நாட்டு திட்டமிடல் உதவி இயக்குனர் ராகுல்குமார், பூதுார் ஊராட்சியில் கட்டப்பட்டு வரும் கட்டடத்தை ஆய்வு செய்தார்.
பின், கட்டட அனுமதி மற்றும் உரிய ஆவணங்களை, 7 நாட்களுக்குள் சமர்ப்பிக்கக்கோரி, சம்பந்தப்பட்ட கட்டட உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கினார்.