/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
எஸ்.ஐ.ஆர்., படிவத்தில் சரியில்லாத விபரங்கள்: செங்கையில் 63,373 வாக்காளர்களுக்கு நோட்டீஸ்
/
எஸ்.ஐ.ஆர்., படிவத்தில் சரியில்லாத விபரங்கள்: செங்கையில் 63,373 வாக்காளர்களுக்கு நோட்டீஸ்
எஸ்.ஐ.ஆர்., படிவத்தில் சரியில்லாத விபரங்கள்: செங்கையில் 63,373 வாக்காளர்களுக்கு நோட்டீஸ்
எஸ்.ஐ.ஆர்., படிவத்தில் சரியில்லாத விபரங்கள்: செங்கையில் 63,373 வாக்காளர்களுக்கு நோட்டீஸ்
ADDED : ஜன 01, 2026 05:03 AM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், எஸ்.ஐ.ஆர்., பணியின்போது, வாக்காளர் அளித்த படிவங்களில் விரங்கள் , முந்தைய எஸ்.ஐ.ஆர்., விபரங்களுடன் ஒத்துப்போகாத, 63, 373 வாக்காளர்களுக்கு தேர்தல் அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், ஏழு சட்டசபை தொகுதிகளில், எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தபணி கடந்த நவ., 4ம் தேதி துவங்கி, கடந்த 14ம் தேதி நிறைவடைந்தது. ஏழு சட்டசபை தொகுதிகளில் உள்ள 27 லட்சத்து 87 ஆயிரத்து 362 வாக்காளர்களுக்கு, 2,826 ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள் கணக்கீட்டு படிவங்களின் பிரதிகளை வழங்கினர். வாக்காளர்களிடமிருந்து பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டு படிவங்கள் திரும்ப பெற்றன.
கடந்த 19ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதில், ஆண் 10 லட்சத்து 22 ஆயிரத்து 756, பெண்கள் 10 லட்சத்து 62 ஆயிரத்து 381, மூன்றாம் பாலினத்தவர் 354 என மொத்தம், 20 லட்சத்து 85 ஆயிரத்து 491 வாக்காளர்கள் உள்ளனர். இறந்தவர்கள் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 565, கண்டிறியப்படாதவர்கள் 2 லட்சத்து 28 ஆயிரத்து 461, இடம் பெயர்ந்தவர்கள் 3 லட்சத்து 36 ஆயிரத்து 594, இரட்டை பதிவு 23 ஆயிரத்து 736, இதர 2,515 பேர் என, மொத்தம் 7 லட்சத்து ஆயிரத்து 871 பேர் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, வரும் ஜன., 18ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், எஸ்.ஐ.ஆர்., பணியின்போது, பூர்த்தி செய்யப்பட்ட படிவம் பெற பட்டவர்களில் 63 ஆயிரத்து 373 பேரின் விவரங்கள் கடந்த 2002-05ம் ஆண்டு பட்டியலுடன் பொருந்தவில்லை. மேலும் பெறப்பட்ட விண்ணப்பிங்களில் முன் உள்ள விபரங்கள் தவறாக உள்ளன. இதை சரி செய்து, மாவட்ட தேர்தல் அலுவலகம், தேர்தல் கமிஷன் அறிவுறுத்தி உள்ள 13 ஆவணங்களில் ஒன்றை சம்பந்தப்பட்ட ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்களிடம் ஜன., 31ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என, நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

