/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அணுசக்தி துறை கிரிக்கெட் கல்பாக்கம் அணி வெற்றி
/
அணுசக்தி துறை கிரிக்கெட் கல்பாக்கம் அணி வெற்றி
ADDED : பிப் 10, 2025 11:44 PM

கல்பாக்கம்,அணுசக்தி துறையின்கீழ், தமிழகம், கர்நாடகம், ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில், அணுமின் நிலையங்கள், அணுசக்தி ஆராய்ச்சி மையங்கள், அணுசக்தி சார்ந்த பிற நிறுவனங்கள் ஆகியவை இயங்குகின்றன.
அவற்றில் பணிபுரியும் ஊழியர்களின், கலை, விளையாட்டு ஆர்வம் கருதி, ஆண்டுதோறும் போட்டிகள் நடத்தப்படுகின்றன. 39ம் ஆண்டு போட்டிகள், தற்போது பல பகுதிகளில் நடக்கின்றன.
தெலுங்கானா மாநிலம், ஹைதராபாதில் பல்வேறு அணிகள் விளையாடிய கிரிக்கெட் போட்டி, பிப்., 4 - 8ல் நடந்தது.
கல்பாக்கத்தைச் சேர்ந்த, ராமேஸ்வரம் அணியினர், கேப்டன் சுரஜ் ஷ்ரவன் மாடவி, மேலாளர் அஷ்கர் அலி தலைமையில் பங்கேற்றனர்.
கடந்த மூன்றாண்டுகளாக, ரன்னராக இருந்த இந்த அணியினர், முதல் முறையாக வென்றனர். மேலும், இந்த அணியைச் சேர்ந்த கேப்டன் சுரஜ், சுரேஷ், பங்கஜ் யாதவ், தினேஷ்குமார் ஆகியோர், அணுசக்தி தேசிய விளையாட்டு குழுவிற்கு தேர்வாகினர்.

