/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாற்றுத்திறனாளி காப்பகம் கட்ட அணுமின் நிலையம் நிதியுதவி
/
மாற்றுத்திறனாளி காப்பகம் கட்ட அணுமின் நிலையம் நிதியுதவி
மாற்றுத்திறனாளி காப்பகம் கட்ட அணுமின் நிலையம் நிதியுதவி
மாற்றுத்திறனாளி காப்பகம் கட்ட அணுமின் நிலையம் நிதியுதவி
ADDED : ஜன 31, 2025 08:52 PM
திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றத்தில், வட்டார வள மையம் சார்பில், மாற்றுத்திறனாளி குழந்தைகள் காப்பகம் உள்ளது. இங்கு 40 பேர், பகலில் தங்கும் நிலையில், குறுகிய கட்டடத்தில், போதிய இடவசதியின்றி சிரமப்படுகின்றனர்.
கூடுதலாக ஒரு கட்டடம் கட்டுமாறு, நிர்வாக தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அதற்காக, சென்னை அணுமின் நிலைய நிர்வாகத்திடம், மாவட்ட நிர்வாகம் பரிந்துரைத்தது. அணுமின் நிலைய நிர்வாகம், இக்கோரிக்கையை பரிசீலித்து, அதன் சமூக பொறுப்பு திட்டத்தின்கீழ், 80 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியது.
நேற்று நடந்த நிகழ்ச்சியில், அணுமின் நிலைய இயக்குனர் சேஷையா, பூமிபூஜையுடன் கட்டுமானப் பணிகளை துவக்கினார். பேரூராட்சி மன்ற பிரதிநிதிகள், வட்டார கல்வி நிர்வாகத்தினர் பங்கேற்றனர்.