/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வரைவு பட்டியலில் வாக்காளர் எண்ணிக்கை...26.95 லட்சம்!:ஆண்களைவிட, 27,650 பெண்கள் அதிகம்
/
வரைவு பட்டியலில் வாக்காளர் எண்ணிக்கை...26.95 லட்சம்!:ஆண்களைவிட, 27,650 பெண்கள் அதிகம்
வரைவு பட்டியலில் வாக்காளர் எண்ணிக்கை...26.95 லட்சம்!:ஆண்களைவிட, 27,650 பெண்கள் அதிகம்
வரைவு பட்டியலில் வாக்காளர் எண்ணிக்கை...26.95 லட்சம்!:ஆண்களைவிட, 27,650 பெண்கள் அதிகம்
UPDATED : அக் 30, 2024 02:50 AM
ADDED : அக் 30, 2024 01:58 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் அருண்ராஜ், நேற்று, வெளியிட்டர். இப்பட்டியலில் மாவட்டத்தில் உள்ள 7 சட்டசபை தொகுதிகளில் 13 லட்சத்து 33,858 ஆண்: 13 லட்சத்து 61,508 பெண்; 478 மூன்றாம் பாலினர் என மொத்தம் 26 லட்சத்து 95,844 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்களை விட 27,650 பெண் வாக்காளர்கள் உள்ளனர்.
![]() |
செங்கல்பட்டு மாவட்டத்தில், ஏழு சட்டசபை தொகுதிகளின், சிறப்பு சுருக்குமுறை திருத்தம் வரைவு வாக்காளர் பட்டியலை, கலெக்டரும், தேர்தல் அலுவருமான அருண்ராஜ். அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட, மாவட்ட வருவாய் அலுவலர் பெற்றுக்கொண்டார்.
அதன்பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
வாக்காளர் பட்டியலில் 13 லட்சத்து 33,858 ஆண்கள். 13 லட்சத்து 61,508 பெண்கள். 478 மூன்றாம் பாலினர் என, 26 லட்சத்து 95,844 உள்ளனர். கடந்த ஏப்., மாத்தத்திலிருந்து, நேற்று வரை, புதிததாக 42,685 பேர் சேர்ந்துள்ளனர். 13,839 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் சமயத்தில் வாக்காளர் சேர்ப்பு, நீக்கம், பெயர், முகவரி மாற்றம் கோரி அரசியல் கட்சி பிரமுகர்கள் மனுக்கள் தருகின்றனர்.
அந்த சமயத்தில் சேர்க்க முடியாத சூழல் உள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், இடமாற்றம் மற்றும் முறையீடுகள் இன்று, 29ம் தேதி துவங்கி வரும் நவ., 28ம் தேதி வரையில் மனுக்கள் பெறப்படும்.
ஓட்டுச்சாவடி மையங்களில் சிறப்பு சுருக்க முறைத்திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம்கள் வருகிற நவ., 16, 17, மற்றும் 23, 24 ஆகிய சனி, ஞாயிறுக்கிழமைகளில் நடைபெறுகிறது.
பெயர் சேர்த்தல் படிவம் 6, நீக்கல் படிவம் 7, இடமாற்றம், தொகுதி மாற்றம், அடையாள அட்டை நகல், படிவம் 8 படிவங்களை பெற்று, பூர்த்தி செய்து தர வேண்டும்.
மனுக்கள் மீது இறுதி முடிவெடிக்கப்பட்டு, அடுத்த ஆண்டு 2025ம் ஆண்டு ஜனவரி 6ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
இந்த வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு, கட்டணமில்லா தொலைபேசி எண் 1950, மாவட்ட தேர்தல் அலுவலக தொலைபேசி எண் 044 29541715 தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர், பேசினார்.
![]() |


