/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
துணி 'அயர்ன்' செய்த நர்ஸ் உயிரிழப்பு மகள் சாவில் மர்ம உள்ளதாக தாய் புகார்
/
துணி 'அயர்ன்' செய்த நர்ஸ் உயிரிழப்பு மகள் சாவில் மர்ம உள்ளதாக தாய் புகார்
துணி 'அயர்ன்' செய்த நர்ஸ் உயிரிழப்பு மகள் சாவில் மர்ம உள்ளதாக தாய் புகார்
துணி 'அயர்ன்' செய்த நர்ஸ் உயிரிழப்பு மகள் சாவில் மர்ம உள்ளதாக தாய் புகார்
ADDED : ஜன 20, 2025 11:40 PM

கூடுவாஞ்சேரி.நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி, 18வது வார்டுக்கு உட்பட்ட நந்திவரம், பள்ளிக்கூட தெருவைச் சேர்ந்த ராஜி, 35, என்பவரது மனைவி சுமதி, 31. இவர், அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்தார்.
தம்பதிக்கு திருமணமாகி 10 ஆண்டுகளுக்கு மேலாகியும், குழந்தை இல்லை.
ராஜி பணி காரணமாக வெளியூர் சென்றுள்ளார்.
நேற்று காலை சுமதி குளித்து விட்டு, ஈர உடையுடன்,'அயர்ன் பாக்ஸ்' பயன்படுத்தி துணியை 'அயர்ன்' செய்துள்ளார். அப்போது, திடீரென மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்துள்ளார்.
உறவினர்கள் அவரை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், மின்சாரம் பாய்ந்து இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
தகவலின்படி வந்த கூடுவாஞ்சேரி போலீசார் சுமதி உடலை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் வசிக்கும் சுமதியின் தாய் மல்லிகா, 57, கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் நேற்று ஒரு புகார் அளித்தார்.
புகாரில் கூறப்பட்டு உள்ளதாவது:
என் மகளுக்கு குழந்தை பாக்கியம் இல்லாததால், அவளை சித்ரவதை செய்து, மன உளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளனர். என் மகளின் கணவர் ராஜி, மாமியார் எஸ்தர், மைத்துனர் ஜோசப், அவரின் மனைவி ரமணி நான்கு பேரும் சேர்ந்து, கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.
ஜோசப் என் மகளை தகாத வார்த்தைகளால் பேசி, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதை என் மகள், அடிக்கடி என்னிடம் கூறுவார். கணவர் வீட்டில் இல்லாத போது உள்ளாடைகளுடன், காயங்களுடன் என் மகள் இருந்துள்ளார்.
மேலும், அவளது பிறப்புறுப்பு அருகே காயங்கள் உள்ளன. எனவே, அவள் இறப்பில் எனக்கு சந்தேகம் உள்ளது.
இவ்வாறு, புகாரில் கூறப்பட்டுள்ளது.
புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், இதுகுறித்து மேலும் விசாரிக்கின்றனர்.

