/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஒடிசா மாநில வாலிபரை தாக்கியவருக்கு 'காப்பு'
/
ஒடிசா மாநில வாலிபரை தாக்கியவருக்கு 'காப்பு'
ADDED : பிப் 18, 2025 05:59 AM
மறைமலைநகர்: ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் வினாய் நாயக், 31. இவர் கடந்த ஆறு மாதங்களாக, பொத்தேரி பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம்., மருத்துவமனையில், துாய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று மதியம் தன்னுடன் பணிபுரியும், மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ரஞ்சித், 58, என்பவருடன் சாப்பிட்டார்.
அப்போது, தண்ணீர் குடிப்பது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
மதுபோதையில் இருந்த வினாய் நாயக், தண்ணீர் பாட்டிலை துாக்கி வீசி ரகளையில் ஈடுபட்டு உள்ளார். அப்போது ரஞ்சித், அருகில் இருந்த 'ரீப்பர்' மரக்கட்டையால் வினாய் நாயக் தலையில் தாக்கி உள்ளார்.
காயமடைந்த அவரை அங்கிருந்தோர் மீட்டு, அதே மருத்துவமனையில் சேர்த்து, எட்டு தையல் போடப்பட்டுள்ளது. மறைமலைநகர் போலீசார்,ரஞ்சித்தை கைது செய்து விசாரிக்கின்றனர்.

