/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கந்தசுவாமி கோவிலுக்கு வேல் காணிக்கை
/
கந்தசுவாமி கோவிலுக்கு வேல் காணிக்கை
ADDED : நவ 19, 2025 04:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலுக்கு, 3.5 அடி உயரமுள்ள பித்தளை வேலை, பக்தர் ஒருவர் காணிக்கையாக வழங்கினார்.
திருப்போரூர் கந்தசுவாமி கோவில் பக்தரான கேளம்பாக்கத்தை சேர்ந்த ராமன் - சந்திரலேக்கா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது.
தம்பதி வேண்டுதல் காரணமாக, திருப்போரூர் கந்தசுவாமி கோவிலுக்கு, பித்தளை வேல் காணிக்கையாக வழங்க முடிவு செய்தனர்.
அதன்படி, நேற்று 5,000 ரூபாய் மதிப்பு உள்ள, 3.5 அடி உயரத்தில், 3 கிலோ எடையுள்ள பித்தளை வேலை கந்தசுவாமி கோவில் நிர்வாகத்திடம் வழங்கினர்.

