ADDED : நவ 18, 2025 03:55 AM
கிளாம்பாக்கம்: பள்ளிக்கரணை காவல் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, தனியார் பள்ளியில் பிளஸ் - 2 படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாணவியின் தாய், தாம்பரம் அடுத்த இரும்புலியூரில் வசிக்கும் தன் தோழியிடம் அளிக்குமாறு, நகை கொடுத்து அனுப்பி உள்ளார்.
இதையடுத்து, மாணவி இரும்புலியூர் சென்ற போது, தாயின் தோழி அங்கு இல்லாத நிலையில், அவரது கணவர் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
அதிர்ச்சியடைந்த மாணவி, அங்கிருந்து தப்பித்து, மருந்துக் கடையில் மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டு, பேருந்தில் சென்றுள்ளார்.
அப்போது, சேலையூர் பேருந்து நிறுத்தத்தில் மாணவி மயங்கி விழ, அங்கிருந்தோர் கூறிய தகவலின்படி போலீசார் வந்து, மாணவியை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
மேல் சிகிச்சைக்காக, சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். புகாரின்படி, கிளாம்பாக்கம் மகளிர் போலீசார் விசாரிக்கின்றனர்.

