/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கந்தசுவாமிக்கு நைவேத்தியம் கட்? ஹிந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
/
கந்தசுவாமிக்கு நைவேத்தியம் கட்? ஹிந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
கந்தசுவாமிக்கு நைவேத்தியம் கட்? ஹிந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
கந்தசுவாமிக்கு நைவேத்தியம் கட்? ஹிந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 23, 2025 12:32 AM
திருப்போரூர், திருப்போரூரில், புகழ்பெற்ற கந்தசுவாமி கோவில் உள்ளது. இங்கு கடந்த பல ஆண்டுகளாக நைவேத்தியம் தயார் செய்து வந்த மடப்பள்ளி ஊழியர், வயது மூப்பு காரணமாக கடந்தாண்டு இறந்தார்.
இதையடுத்து, கோவில் அன்னதான கூடத்தில் சமையல் செய்யும் ஒருவர் நைவேத்தியம் தயார் செய்து வந்துள்ளார்.ஆனால் இது, நான்கு கால பூஜைக்கு ஏற்றதாக இல்லை என, ஆதங்கம் எழுந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன், ஆருத்ரா அன்று, திருவாதிரை கலி செய்து சுவாமிக்கு படைத்து, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டுள்ளது.
இந்த நைவேத்தியம் சரியாக வேகவில்லை என, பக்தர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
இந்நிலையில் நேற்று, ஹிந்து முன்னணி அமைப்பு மாவட்ட துணை பொதுச்செயலர் ராஜசேகர் தலைமையில் 30க்கும் மேற்பட்டோர், கோவில் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர்.
அப்போது, உடனே மடப்பள்ளி ஊழியரை நியமித்து, முறையாக சுவாமிக்கு நைவேத்தியம் தயாரித்து படைக்க வேண்டுமென கோஷமிட்ட னர்.இதையடுத்து போலீசார், கோவில் நிர்வாகத்தினர், மடப்பள்ளி ஊழியரை நியமிக்க ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறி சமாதானம் செய்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

