/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
துணை மின் நிலையம் அமைக்க நிலத்தை மீட்ட அதிகாரிகள்
/
துணை மின் நிலையம் அமைக்க நிலத்தை மீட்ட அதிகாரிகள்
ADDED : நவ 09, 2024 12:49 AM

பல்லாவரம்:பல்லாவரம் அடுத்த அஸ்தினாபுரம், திருமலை நகர், கணபதி காலனி, சரஸ்வதிபுரம் உள்ளிட்ட பகுதிகளில், குறைந்த மின்னழுத்த பிரச்னை நிலவுகிறது.
இதனால், அப்பகுதி மக்களின் வசதிக்காக, துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.
இக்கோரிக்கையை ஏற்று, அஸ்தினாபுரம், பொன்னியம்மன் கோவில் தெருவில், 55 சென்ட் களம் புறம்போக்கு நிலத்தில் துணை மின் நிலையம் அமைக்க, 2021ல், கலெக்டர் அனுமதி அளித்தார்.
இதற்கிடையில், அப்பகுதியை சேர்ந்த ஒருவர், அந்த நிலம் தனக்கு ஒதுக்கப்பட்டதாக கூறி, நீதிமன்றத்துக்கு சென்றார். இதனால், துணை மின் நிலையம் அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டது.
இந்த நிலையில், பல்லாவரம் தாசில்தார் மற்றும் போலீசார் உதவியுடன், நேற்று முன்தினம், அந்த நிலத்தை கையகப்படுத்தி, அங்கு மின்வாரிய அறிவிப்பு பலகை நடப்பட்டது.
தொடர்ந்து, அந்த நிலத்தில், 33 கி.வோல்ட் துணை மின் நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கையில், மின்வாரிய அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.