/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அனுமதியற்ற நடைபாதை கடைகள் மாமல்லையில் அதிகாரிகள் அகற்றம்
/
அனுமதியற்ற நடைபாதை கடைகள் மாமல்லையில் அதிகாரிகள் அகற்றம்
அனுமதியற்ற நடைபாதை கடைகள் மாமல்லையில் அதிகாரிகள் அகற்றம்
அனுமதியற்ற நடைபாதை கடைகள் மாமல்லையில் அதிகாரிகள் அகற்றம்
ADDED : செப் 24, 2024 03:16 AM
மாமல்லபுரம் : மாமல்லபுரம் பிரதான சாலைகளில், போக்குவரத்திற்கும், சுற்றுலா பயணியருக்கும் இடையூறாக ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. இதனால் நெரிசல் ஏற்பட்டு, போக்குவரத்து முடங்குகிறது. பொதுமக்கள், சுற்றுலா பயணியர் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
சப் - கலெக்டர் நாராயணசர்மா, இங்கு ஆய்வுசெய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு, அரசுத் துறையினருக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து, வருவாய், பேரூராட்சி, நெடுஞ்சாலை, போக்குவரத்து காவல் ஆகிய துறையினர், கடந்த 18ம் தேதி முதல் ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர். சனி, ஞாயிறு என விடுமுறை நாட்கள் தவிர்த்து, நேற்று மீண்டும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடர்ந்தது.
கடற்கரை கோவில் முகப்பு பகுதியில், ஒருவரே சாலை, நடைபாதை உள்ளிட்டவற்றை ஆக்கிரமித்து, பல கடைகள் நடத்துவதும், பலரும் அப்பகுதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட கடைகள் நடத்துவதும் தெரிந்தது.
அவர்கள், நடைபாதை வியாபாரிக்கான அரசு அனுமதி பெறாததும் தெரிந்தது. அக்கடைகளை அகற்ற அறிவுறுத்திய அதிகாரிகள், நடைபாதை வியாபார அனுமதி பெறும் நபர், ஒரு கடை மட்டுமே நடத்த வேண்டும் என, எச்சரித்தனர்.
ஒருவரே பல கடைகள் நடத்த அனுமதியில்லை என்றும் அறிவுறுத்தினர். மீறி கடைகள் நடத்தினால், பறிமுதல் செய்யப்படும் எனவும், அதிகாரிகள் எச்சரித்தனர்.