/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சிறுமி வன்கொடுமை வழக்கு முதியவருக்கு 22 ஆண்டு சிறை
/
சிறுமி வன்கொடுமை வழக்கு முதியவருக்கு 22 ஆண்டு சிறை
சிறுமி வன்கொடுமை வழக்கு முதியவருக்கு 22 ஆண்டு சிறை
சிறுமி வன்கொடுமை வழக்கு முதியவருக்கு 22 ஆண்டு சிறை
ADDED : அக் 23, 2024 01:30 AM

செங்கல்பட்டு:காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த, 10 வயது சிறுமி, கடந்த 2022 நவ., 26ம் தேதி இரவு, வீட்டின் அருகில் இருந்த குமார், 60, என்பவரின் கடைக்கு, இட்லி மாவு அரைக்க சென்றார்.
மாவு அரைத்த பின், வீட்டிற்கு சிறுமி திரும்பிய போது, சிறுமியை இழுத்து சென்ற குமார், மாவு மில்லின் பின்புறம் அழைத்து சென்று, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
மேலும், இது குறித்து வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவேன் எனவும், சிறுமியை மிரட்டியுள்ளார்.
இது குறித்து, சிறுமி தாயாரிடம் கூறியதையடுத்து, சிறுமியின் தாய் காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்படி, போக்சோ உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த வழக்கு, நேற்று செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில், நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், வழக்கறிஞர் மைதிலி வாதாடினார்.
அரசு தரப்பில், 11 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்படதையடுத்து, குமாருக்கு 22 ஆண்டுகள், ஒரு மாதம் கடுங்காவல் தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
அபராத தொகையை கட்டத்தவறினால், மேலும் இரண்டு ஆண்டுகள், 3 மாதம் சிறை தண்டனை வழங்கப்படும் என, போக்சோ நீதிமன்ற நீதிபதி நசீமா பானு தீர்ப்பளித்தார்.