/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கோயம்பேடில் ஆம்னி பஸ் முன்பதிவு அதிகரிப்பு
/
கோயம்பேடில் ஆம்னி பஸ் முன்பதிவு அதிகரிப்பு
ADDED : பிப் 13, 2024 04:35 AM
சென்னை : கிளாம்பாக்கத்தில் பேருந்து முனையம் திறக்கப்பட்ட பின், கோயம்பேடு, எழும்பூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து பயணியரை ஏற்றி செல்லவும், இறக்கி விடவும், கடந்த மாதம் 24ம் தேதி முதல் முதல் தடை உத்தரவு அமலானது.
அதன்பின், சென்னை நகருக்குள் பயணியருடன் ஆம்னி பேருந்துகள் அனுமதிக்கப்படவில்லை. இதையடுத்து, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் உயர் நீதிமன்றத்தை நாடினர்.
இதற்கிடையே, கோயம்பேடில் இருந்து பயணியரை ஏற்றி இறக்கவும், போரூர், சூரப்பட்டில் பயணியரை ஏற்றி, இறக்கவும் நீதிமன்றம் தற்காலிக அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த சில நாட்களாக, கோயம்பேடில் ஆம்னி பேருந்துகள் மீண்டும் இயக்கப்படுகின்றன.
கிளாம்பாக்கத்தில் இருந்து மீண்டும் கோயம்பேடிற்கு மாற்றியதால், தற்போது ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்வது, 30 சதவீதம் அதிகரித்து உள்ளது என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் கூறினார்.