/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மொபைல் போன் பறித்த ஒருவன் கைது; 2 பேர் 'எஸ்கேப்'
/
மொபைல் போன் பறித்த ஒருவன் கைது; 2 பேர் 'எஸ்கேப்'
ADDED : மே 18, 2025 09:47 PM
திருப்போரூர்:அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அப்துல் முனாப், 24, அவரது சகோதரர் சித்திக் அலி, 28.
இவர்கள் திருப்போரூர் அடுத்த காலவாக்கம் கிராமத்தில் தங்கி, அங்குள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று காலை 10:00 மணியளவில், தாங்கள் தங்கியுள்ள வீட்டிற்கு அருகே, இருவரும் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது 'பைக்'கில் வந்த மூன்று பேர், இவர்களை தாக்கி, மொபைல்போன், 2,000 ரூபாயை பறித்துக் கொண்டு தப்பினர்.
கூச்சல் சத்தத்தைக் கேட்டு அங்கிருந்தோர் ஓடி வந்து, மூவரையும் பிடிக்க முயற்சித்தனர். அதில் ஒருவன் மட்டும் சிக்கினார். மற்ற இருவர் பைக்கில் தப்பிச் சென்றனர்.
பின், திருப்போரூர் போலீசாருக்கு தகவல் அளித்து, சிக்கிய நபரை ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில், பிடிபட்ட நபர் தையூர் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ், 20, என தெரிந்தது. இவரை கைது செய்து வழக்குப் பதிவு செய்த போலீசார், மற்ற இருவரையும் தேடி வருகின்றனர்.