/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
உண்டியலை உடைக்க முயற்சி ஒருவர் கைது; ஒருவருக்கு வலை
/
உண்டியலை உடைக்க முயற்சி ஒருவர் கைது; ஒருவருக்கு வலை
உண்டியலை உடைக்க முயற்சி ஒருவர் கைது; ஒருவருக்கு வலை
உண்டியலை உடைக்க முயற்சி ஒருவர் கைது; ஒருவருக்கு வலை
ADDED : நவ 20, 2024 10:11 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு அடுத்த திம்மாவரம் கிராமத்தில், வலம்புரி பால விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில், நேற்று அதிகாலை புகுந்த இரண்டு மர்ம நபர்கள், உண்டியலை உடைத்து திருட முயன்றனர்.
இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் கூச்சலிடவே, மர்ம நபர்கள் தப்பியோட முயன்றனர். ஒருவரை மடக்கி பிடித்த கிராம மக்கள், அந்த நபரை செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், பிடிபட்ட நபர் கூடுவாஞ்சேரி அடுத்த தைலாவரம் பகுதியை சேர்ந்த ஹரிக்குமார், 45, என்பது தெரிய வந்தது.
இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், ஹரிக்குமாரை கைது செய்து, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தப்பிச்சென்ற மற்றொரு நபரை தேடி வருகின்றனர்.