/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
20 நிமிடத்திற்கு ஒரு ரயில் தாம்பரத்தில் நெரிசல்
/
20 நிமிடத்திற்கு ஒரு ரயில் தாம்பரத்தில் நெரிசல்
ADDED : ஜன 05, 2025 09:52 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாம்பரம்,:தாம்பரம் யார்டில் நடைமேம்பால கட்டுமானப் பணி நடப்பதால், கடற்கரை- - தாம்பரம் தடத்தில், வழக்கமாக இயங்கும் 59 மின்சார ரயில்கள், காலை 7:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை,  ரத்து செய்யப்பட்டன.
அதனால், 20 நிமிடத்திற்கு ஒரு மின்சார ரயில் இயக்கப்பட்டது. இதனால், தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசல் அதிகம் இருந்தது.
இதனால், பலர் அரசு பேருந்துகளில் பயணித்ததால், பேருந்துகளிலும் நெரிசல் ஏற்பட்டது.
ஞாயிறு விடுமுறை அன்று , பொங்கல் பண்டிகைக்கு ஷாப்பிங் சென்ற பொதுமக்கள், கூட்ட நெரிசலால் அவதிக்குள்ளாகினர்.

