/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திறந்தவெளியில் மருத்துவ கழிவு குவிப்பு சரவம்பாக்கத்தில் நோய் பரவும் அபாயம்
/
திறந்தவெளியில் மருத்துவ கழிவு குவிப்பு சரவம்பாக்கத்தில் நோய் பரவும் அபாயம்
திறந்தவெளியில் மருத்துவ கழிவு குவிப்பு சரவம்பாக்கத்தில் நோய் பரவும் அபாயம்
திறந்தவெளியில் மருத்துவ கழிவு குவிப்பு சரவம்பாக்கத்தில் நோய் பரவும் அபாயம்
ADDED : ஏப் 05, 2025 01:28 AM

சித்தாமூர்:சரவம்பாக்கத்தில், திறந்தவெளியில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதால், மர்ம நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சித்தாமூர் அருகே சரவம்பாக்கம் ஊராட்சியில், நுாற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
குப்பை அதிகம் தேங்கும் இடங்களில், ஊராட்சி நிர்வாகம் சார்பாக, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டு உள்ளன.
இந்த குப்பைத் தொட்டிகளில் தேங்கும் குப்பையை, துாய்மை பணியாளர்கள் மூன்று சக்கர வண்டிகளில் எடுத்துச் சென்று, செய்யூர் - போளூர் சாலை ஓரத்தில் கொட்டுகின்றனர்.
இந்த குப்பை திறந்தவெளியில் கொட்டப்படுவதால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும், இந்த குப்பை கொட்டப்படும் இடத்தில், சித்தாமூர் மற்றும் சரவம்பாக்கம் பகுதியில் செயல்படும் தனியார் மருத்துவமனைகளில் இருந்து வெளியேற்றப்படும் ஊசி, மருந்து பாட்டில்கள் போன்ற மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுகின்றன.
இதனால், துாய்மை பணியாளர்களுக்கும் நோய் பரவும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சரவம்பாக்கம் ஊராட்சியில் சட்டத்திற்கு புறம்பாக மருத்துவக் கழிவுகளை கொட்டும் தனியார் மருத்துவமனை நிர்வாகங்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

