/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஓபன் ஸ்னுாக்கர்ஸ்: தமிழக வீரர்கள் அசத்தல்
/
ஓபன் ஸ்னுாக்கர்ஸ்: தமிழக வீரர்கள் அசத்தல்
ADDED : மார் 19, 2024 10:01 PM

சென்னை:அகில ஓபன் ஸ்னுாக்கர் போட்டியில், தமிழக வீரர்கள் தொடர்ந்து வெற்றி பெற்று அசத்தி வருகின்றனர்.
அண்ணா நகர் டவர் கிளப் சார்பில், அகில இந்திய ஓபன் ஸ்னுாக்கர் போட்டி அண்ணா டவர் பூங்காவில் நடந்து வருகிறது. இதில், அர்ஜுனா விருது பெற்ற சவூராவ் கோதாரி உட்பட, நாட்டின் முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
நேற்று நடந்த போட்டியில், தமிழக வீரர் தமிழவாணன், 3 - 0 என்ற கணக்கில் டவர்ஸ் கிளப் வீரர் ஆனந்தை தோற்கடித்தார்.
மற்றொரு போட்டியில், தமிழக வீரர் அஷ்வத் அமீத், 3 - 0 என்ற கணக்கில் மற்றொரு தமிழக வீரரான கணேஷை வீழ்த்தினார்.
அடுத்த போட்டியில், தமிழக வீரர்கள் விஜந்திரா மற்றும் நவீன் மோதினர். அதில், 3 - 0 என்ற கணக்கில், நவீன் வெற்றி பெற்றார். போட்டிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

