/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கை அரசு பள்ளியில் புதிய நுாலகம் திறப்பு
/
செங்கை அரசு பள்ளியில் புதிய நுாலகம் திறப்பு
ADDED : செப் 25, 2024 12:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு:செங்கல்பட்டு அறிஞர் அண்ணா நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களுக்காக நுாலகம் புதுப்பிக்கப்பட்டது. இந்த நுாலகத்தை, கலெக்டர் அருண்ராஜ் நேற்று திறந்து வைத்தார்.
முதன்மை கல்வி அலுவலர் கற்பகம், பெற்றோர் - ஆசிரியர் கழக தலைவர் வேலாயுதம், தலைமையாசிரியர் உதயகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்நுாலகத்தில், தமிழ் இலக்கியம், இலக்கணம், கட்டுரை, கவிதை, கதை புத்தகங்கள், உயர் கல்வி சார்ந்த புத்தகங்கள், போட்டித்தேர்வு சம்பந்தமான புத்தகங்கள் உள்ளன.
மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரங்களில் படிக்க, அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன என, தலைமையாசிரியர் தெரிவித்தார்.