/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ரூ.94 லட்சத்தில் கந்தசுவாமி கோவிலில் அலுவலகம், ஆதீன குடியிருப்பு திறப்பு
/
ரூ.94 லட்சத்தில் கந்தசுவாமி கோவிலில் அலுவலகம், ஆதீன குடியிருப்பு திறப்பு
ரூ.94 லட்சத்தில் கந்தசுவாமி கோவிலில் அலுவலகம், ஆதீன குடியிருப்பு திறப்பு
ரூ.94 லட்சத்தில் கந்தசுவாமி கோவிலில் அலுவலகம், ஆதீன குடியிருப்பு திறப்பு
ADDED : மார் 08, 2024 09:41 PM

திருப்போரூர்:திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், கிருத்திகை, சஷ்டி, விசாகம் நாட்களில் ஏராளமான பக்தர்கள் கந்தனை வழிபட வருகின்றனர்.
இதனால், கோவில் பிரசாத கடை, முடி ஏலம், உண்டியல் வருமானம், சிறப்பு பிரார்த்தனை கட்டணம் என, கந்தசுவாமி கோவிலுக்கு, ஆண்டுக்கு 6 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைக்கிறது.
இதுதவிர, தங்கம், வெள்ளி என, விலை உயர்ந்த பொருட்களும் காணிக்கையாக உண்டியலில் செலுத்தப்படுகின்றன.
கோவில் கொடிமரம் அருகே, கந்தசுவாமி கோவில் அலுவலகம் இருந்த இடத்தில், அன்னதான கூடம் கட்டப்பட்டு, தினசரி பக்தர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. பின், 14வது ஆதீனம் சிவஞான சுவாமிகள் பயன்படுத்தி வந்த மடத்தை, அலுவலகமாக பயன்படுத்த துவங்கினர்.
நாளடைவில், அந்த கட்டடமும் சேதமடைந்ததால், அருகே இருந்த மாநிலங்களவை உறுப்பினர் மேம்பாட்டில் கட்டப்பட்ட பக்தர்கள் பல்நோக்கு கட்டடத்தை, தற்போது அலுவலகமாக பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சிதிலமடைந்து இருந்த ஆதீன குடியிருப்பு கட்டடத்தை அகற்றி, அதே இடத்தில், புதிதாக கந்தசுவாமி கோவில் அலுவலகம் மற்றும் ஆதீன குடியிருப்பு கட்டடம் கட்ட, கோவில் நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டது.
இதற்காக, சிதிலமடைந்து இருந்த ஆதீன குடியிருப்பு கட்டடம் அகற்றப்பட்டது. அந்த இடத்தில், 94 லட்சம் ரூபாய் மதிப்பில், கோவில் அலுவலகம் மற்றும் ஆதீன குடியிருப்பு கட்டடப்பட்டுள்ளது.
இதற்கான திறப்பு விழா நேற்று நடந்தது. சென்னையிலிருந்து முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
தொடர்ந்து, திருப்போரூரில் நடந்த நிகழ்ச்சியில், திருப்போரூர் பேரூராட்சி தலைவர் தேவராஜ் பங்கேற்று கட்டடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
செங்கல்பட்டு மாவட்ட உதவி ஆணையர் லட்சுமிகாந்த பாரதிதாசன், கோவில் செயல் அலுவலர் குமரவேல், பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

