/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
'ஒன் ஸ்டாப் சென்டர்' பெரும்பாக்கத்தில் திறப்பு
/
'ஒன் ஸ்டாப் சென்டர்' பெரும்பாக்கத்தில் திறப்பு
ADDED : பிப் 09, 2025 09:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை,:பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்கு, ஒரு இடத்தில் தீர்வு காணும் வகையில், சமூகநலத்துறை சார்பில், மாவட்டம்தோறும் 'ஒன் ஸ்டாப் சென்டர்' என்ற ஒருங்கிணைந்த சேவை மையம் திறக்கப்படுகிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தில், ஏற்கனவே ஒரு சென்டர் திறக்கப்பட்டுள்ளது. பெரும்பாக்கம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில், ஒரு லட்சம் பேருக்கு மேல் வசிப்பதால், இங்கு கூடுதலாக ஒரு சென்டர் திறக்க, மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது.
இதன்படி, நேற்று முன்தினம் செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ், ஒன் ஸ்டாப் சென்டரை திறந்து வைத்தார்.

