/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ரூ.51 கோடியில் பாதாள சாக்கடை திறப்பு
/
ரூ.51 கோடியில் பாதாள சாக்கடை திறப்பு
ADDED : பிப் 25, 2024 02:20 AM

திருப்போரூர்,:திருப்போரூர் பேரூராட்சியில், 15 வார்டுகளில், 30,000த்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த வேண்டும் என, இப்பகுதியினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் பேரூராட்சி நிர்வாகம் இணைந்து, 51.58 கோடி ரூபாய் மதிப்பில், பாதாள சாக்கடை பணிகளை 2018ல் துவங்கின.
காலவாக்கம் பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், கழிவுநீர் உந்து நிலையங்கள், பேரூராட்சி உட்பட்ட பகுதிகளில் குழாய்களை புதைக்கும் பணிகள், கான்கிரீட் சாக்கடை தொட்டி அமைக்கும் பணிகள் உட்பட பல பணிகள் துவக்கப்பட்டன.
இதையடுத்து, இதற்கான திறப்பு விழா நேற்று நடந்தது. தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக பாதாள சாக்கடை திட்டத்தை திறந்து வைத்தார்.